மஹிந்தவின் பாதுகாப்பு திடீரென மீளப்பெறப்பட்டது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு திடீரென மீளப்பெறப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Mahinda-army
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 102 இராணுவத்தினரையும் இன்றிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.

குறித்த பாதுகாப்பு கடமையிலீடுபட்டிருந்த 102 இராணுவத்தினரையும் இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் இராணுவத் தலைமையகத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அதற்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் கடமையில் பொலிஸாரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகவும் அவ் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Copyright © 1975 Mukadu · All rights reserved · designed by Speed IT net