எரிக் சொல்ஹெமுக்கு ஐ.நா உதவிச்செயலர் பதவி

eric-solheim-450x313

சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம், ஐ.நாவின் உதவிச் செயலராக நியமிக்கப்படவுள்ளார்.

ஐ.நா சுற்றுச்சூழல் திட்டத்தின் United Nations’ Environment Programme (UNEP), உதவிச் செயலராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்படவுள்ளதாக, Dagens Næringsliv நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த நியமனம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோர்வேயின் முன்னாள் அமைச்சரான எரிக் சொல்ஹெய்ம், பாரிசில் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு அமைப்பில் பணியாற்றுகிறார்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும், இடையிலான அமைதி முயற்சிகளுக்கான ஏற்பாட்டாளராக எரிக் சொல்ஹெய்ம் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net