மே தினத்தால் 20 மில்லியன் வருமான இழப்பு.!

13077030_1736420489906004_1187094672066669418_n
தென் அதிவேக வீதியால் செல்லும் வாகனங்களுக்கு கட்டணங்கள் அறவீடு செய்யாமையல் மேதினத்தன்று 20 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மே தினத்தால் தெற்கு அதிவேக வீதியால் செல்லும் வாகனங்களுக்கு கட்டணங்கள் அறவீடு செய்யப்படவில்லை. இதனால் 20 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

மே தினக் கூட்டங்கள், பேரணிகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தவோ துஷ்பிரயோகம் செய்யவோ கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தத்தமது கட்சிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீரகேசரி

Copyright © 2754 Mukadu · All rights reserved · designed by Speed IT net