வரலாற்றுச் சம்பவம் : சுவாமிநாதன் கூறுகின்றார்

DM_Swaminathan
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்திற்கு யாழில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டுள்ளனர். இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சருமான டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

கொழும்பில் இடம்பெற்ற மேதின கூட்டமொன்றில் யாழ்ப்பாணத்திலிருந்து பாரியளவிலான மக்கள் கலந்துக்கொண்டமை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும் யாழ். மக்களின் முக்கிய பிரச்சினையாக காணப்படும் காணி பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வீரகேசரி

Copyright © 8579 Mukadu · All rights reserved · designed by Speed IT net