இனி எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன்: – வைகோ அதிரடி அறிவிப்பு.

vaiko-31-03-16-seithyindiaஇனி வாழ்நாளில் எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன் என்று வைகோ கூறினார்.ஆயிரம் விளக்கு தொகுதி மதிமுக வேட்பாளர் சி.அம்பிகாபதியை ஆதரித்து, மாதிரி பள்ளி பகுதியில் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது, பிரசார பேச்சை வைகோ நிறைவு செய்தபோது மதிமுக தொண்டர் ஒருவர், “”நீங்கள் முதல்வராகத் தேர்தலில் போட்டியிட வேண்டியது தானே” என்று கேட்டார். அதற்கு, வைகோ அளித்த பதில்: “”அண்ணாவின் கொள்கைகளுக்காக, சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வதற்காக, மதுக் கடைகளை-ஊழலை ஒழிக்க, தமிழக மக்களைக் காக்க வாழ்கிறேன். எனக்கென சுயநலம் இல்லை. நாடு கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக பேசுகிறேன். இனி என் வாழ்க்கையில் எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன்” என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net