பரந்தன்: ரயிலில் மோதி இளைஞன் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் சிக்குண்டு, இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
13152699_10205070223355070_550143891_n
இவ்விபத்துச் சம்பவம், கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.

வட்டக்கச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த பரந்தன் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 24 வயதுடைய ரிக்ஷன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனுடன் மேலும் இருவர் பயணித்தாகவும் அவர்கள் அலைபேசியில் கதைத்துக்கொண்டு சென்றமையினால் புகையிரதம் வருவதை அவதானிக்காமையினாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 3267 Mukadu · All rights reserved · designed by Speed IT net