ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஈராக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பென்டகன் தகவல் வெளியிட்டுள்ளது.
தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபு வாஹீப் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
வாஹீம் ஈராக்கிய அல் கய்தா இயக்கத்தின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாஹீப் கொல்லப்பட்டதாக இதற்கு முன்னர் சில தடவைகளிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் வாகனமொன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட தாக்குதலில் வஹீம் கொல்லப்பட்டுள்ளார்.
1986ம் ஆண்டு பிறந்த வஹீப் ஓர் கணனி விஞ்ஞான மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வஹீப்பை அமெரிக்கத் துருப்பினர் ஈராக்கில் வைத்து கைது செய்து மரண தண்டனை விதித்திருந்தனர் எனினும், அவர் 2012ம் ஆண்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றார்.
குளோபல் தமிழ்