அவசர கதியில் சிங்களத்தில் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’

thamilini book5555தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி எழுதினார் எனக் கூறப்பட்ட ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் அவசர கதியில் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறை விரிவுரையாளர் விமல் சுவாமிநாதன் மொழிபெயர்த்திருக்கும் இந்த நூலை தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு வெளியிடுகின்றது.

இதேவேளை ஒரு கூர்வாளின் நிழலில் நூலை தமிழினி எழுதவில்லை. சிலரின் தேவைகளுக்காக அவர்களின் கருத்துக்களை தமிழினியின் கருத்துக்களாக அவரின் கணவர் ஜெயக்குமாரனின் துணையுடன் நூலாக வெளியிட்டுள்ளனர் எனப் பல தரப்பினரும் சாடி வருகின்றனர். இந்நிலையிலேயே நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை சிங்கள மொழி பெயர்ப்பு நூலான ஒரு கூர்வாளின் நிழலில் வெளியீடு செய்யப்படவுள்ளது. மேலும், தமிழில் வெளியான இந்நூல் குறித்த சர்ச்சைகள் குறையாத நிலையில் சிங்கள நூலின் வடிவமைப்பும் இப்போது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Copyright © 2989 Mukadu · All rights reserved · designed by Speed IT net