இராக்கில் கார் குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் பலி

இராக்கில் கார் குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் பலி

160511092941_iraq_512x288_bbc_nocredit
இராக்கில் கார் குண்டு வெடித்த இடம்

இராக்கின் கிழக்கு பாக்தாதில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப்பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இராக்கில் நடந்த மிக மோசமான குண்டுத் தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சத்ர் மாவட்டத்தில் காலை நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலைத் தாமே நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

ஷியாக்களை விரோதிகளாகக் கருதும் இந்த அமைப்பு அடிக்கடி அவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குண்டுத்தாக்குதல்களை நடத்திவருகின்றது.

தலைநகருக்கு வடமேற்காக இஸ்லாமிய அரசு என்னும் அமைப்பின் வசமிருந்த பெருமளவு இடங்களை இராக்கிய அரசாங்க படைகள் பிடித்துள்ளன.

ஆனாலும், நாட்டின் பல பகுதிகளிலும் குண்டுத் தாக்குதல்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன.
பிபிசி

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net