சித்திரவதை முகாம்கள் இல்லை : அரசாங்கம்

D1f5d1f5d1fdfdf
திருகோணமலை கடற்படை முகாமுக்குள் எந்தவிதமான சித்திரவதை முகாம்களும் இல்லையென அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சில இடங்களில் சில பொலிஸார் அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுமென்றும் அரசு தெரிவித்தது.

கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடாகவியலாளர் மாநாட்டிலேயே அரசாங்கம் இத்தகவல்களை அரசு வெளியிட்டது.

இங்கு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்தன ஐ.நா. குழுவினர் அரசுக்கு அறிவிக்காமலேயே திருகோணமலையிலுள்ள கடற்படை முகாமுக்கு சென்றனர்.

அங்கு சென்றவர்கள் அங்குள்ள முகாமை பார்வையிட்டனர்.

அம் முகாமில் எவ்விதமான சித்திரவதைகளும் இடம்பெறவில்லையென்றும் ஐ.நா. குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சில இடங்களில் சில பொலிஸார் அத்துமீறி நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.

சந்தேக நபர்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றனர்.

அவ்வாறான சம்பவங்கள் தெற்கிலேயே அதிகம் இடம்பெற்றுள்ளன.

இவை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனைகள் வழங்கப்படும். எனவே ஒட்டு மொத்தமாக பொலிஸார் அனைவரும் அத்துமீறி செயற்படுகின்றனர் எனக் கூற முடியாது.

எமது நாட்டில் கடற்படை முகாமுக்கு சென்று பரீட்சிப்பதற்கு நாம் அனுமதி வழங்கினோம்.

ஆனால் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் சித்திரவதை முகாம்கள் உள்ளன. அவற்றை பார்வையிடுவதற்கு அனுமதியளிக்கப்படுவதில்லை.

Copyright © 6383 Mukadu · All rights reserved · designed by Speed IT net