பொது மக்களை நினைவுகூரலாம், புலிகளை நினைவுகூர முடியாது அரசு .

150206150030_ruwan_wijewardene_512x288_ruwanwijewardene
பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன் விஜேவர்தன

இலங்கையில் போரில் உயிரிழந்த மக்களை நினைவுக்கூர உறவினர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன் விஜேவர்தன, விடுதலைப் புலிகளை நினைவுக்கூரும் நடவடிக்கைகளை அனுமதிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

போரில் கொல்லப்பட்டவர்களுக்காக ஒருவார கால நினைவு தினம் அனுசரிக்கப்படும் என்று வட-மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளமை தொடர்பில், கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சர் ருவன் விஜேவர்தனவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

முள்ளிவாய்க்காலில் பலியானவர்களின் நினைவாக ஒருவார கால நினைவு அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வட-மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.

’12ஆம் தேதியிலிருந்து வரும் 18ஆம் தேதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ள இந்த நினைவு வாரத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் உட்பட 1948ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழர்கள் அனைவரும் நினைவுக்கூரப்படுவார்கள்’ என்று சிவாஜிலிங்கம் கூறியிருந்தார்.

இறுதிப்போரின்போது கொல்லப்பட்ட மக்களின் ஏழாவது ஆண்டு நினைவாக மே 18-ம் தேதி முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படும் என்றும் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறினார்.
பிபிசி

Copyright © 3178 Mukadu · All rights reserved · designed by Speed IT net