நல்லுருவ பகுதியில் கடும் காற்று : 30 வீடுகள் சேதம் : ஒருவர் காயம் : 40 குடும்பங்கள் இடம்பெயர்வு

பாணந்துறை, நல்லுருவ பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக 40 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் 30 வீடுகள் பகுதியளவிலும் 5 வீடுகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன
கடும் மின்னல் மற்றும் அடை மழையுடன் இரண்டு நிமிடம் வீசிய கடும் காற்றினாலே மேற்படி சேதம் ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
Nalluruwa-gale
இதேவேளை வீடு ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததை தொடர்ந்து ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதுவரை பாணந்துறை பொலிஸார் மாத்திரமே எம்மை வந்து பார்வையிட்டுள்ளதாகவும் எந்தவொரு அதிகாரிகளும் வந்து தம்மை பார்வையிடவில்லை எனவும் உடனடியாக தமக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net