கடும் காற்று: 40 படகுகள் கடலில் மூழ்கின

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
article_1463393410-2
மன்னார் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய கடும் காற்று காரணமாக, மன்னார் பேசாலை கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 படகுகள் சேதமாகியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் கடும் மழை பெய்துவரும் நிலையில், இன்று அதிகாலையில் மன்னாரில் திடீரென கடுங்காற்று வீசியது.

இதனையடுத்து, பெரியளவிலான படகுகள் 20 சேதமடைந்ததுடன் ஏனைய 20 படகுககள் கடலில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், கடலில் மூழ்கியுள்ள படகுகளை தேடும் பணியில் அப்பகுதி மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 3 ஆம் பிட்டி கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 படகுகள் சேதமாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது.
தமிழ் மீரோர்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net