அம்பத்தேலே நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாதிப்பில்லை

ambathale_CIஅம்பத்லே நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாதிப்பு கிடையாது என இலங்கை நீர் விநியோக மற்றம் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாதிப்பு கிடையாது என சுத்திகரிப்பு நிலையத்தின் முகாமையாளர் பீ.ஆர். ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எவ்வித தடையும் இன்றி நீரை கொழும்பு நகரிற்கு விநியோகம் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக களனி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்தால், கொழும்பு நகரின் நீர் விநியோகம் பாதிக்கப்படும் என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குளோபல் தமிழ்

Copyright © 6510 Mukadu · All rights reserved · designed by Speed IT net