சிரியாவின் தலைநகர் டமஸ்கஸின் ஜப்லே , டார்டஸ் ஆகிய இரு நகரங்களில் இன்று காலை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் 7 சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததாகவும் ஜப்லே நகரில் 53 பேரும், டார்டஸ் நகரில் 48 பேரும் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தாக்குதலுக்குள்ளாகியுள்ள இரு நகரங்களிலும் இதுவரை இம்மாதிரியான குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.