பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலி விழுந்து விபத்து.

article_1464157898-bellஹிங்குராங்கொட விமானப் படை தலைமையகத்தில், விமானப்படை அதிகாரிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெல் 206 ரக ஹெலிகொப்டர், சற்றுமுன்னர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்றும், ஹெலிகொப்டருக்கு ஏற்பட்ட சேதங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றும் விமானப்படை ஊடகப்பேச்சாளர் குரூப் கெப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்தார்.

Copyright © 4557 Mukadu · All rights reserved · designed by Speed IT net