அமெரிக்காவின் முன்னணி இணையதள நிறுவனமான கூகுள் தலைமையகத்தில் வரி ஏய்ப்பு மோசடி தொடர்பான வழக்கு விசாரணை குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி உள்ளனர்.
மத்திய பாரீஸில் இருந்த கூகுள் தலைமை அலுவலகத்திற்குள் இன்று அதிகாலை சுமார் 100 வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்தனர்.
பிரெஞ்சு அரசாங்கத்துக்கு கூகுள் நிறுவனம் சுமார் 1.8 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 12,186 கோடி ரூபாய்) வரி பாக்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பிபிசி