நீதிபதியும் அதன் அரசியலும்

images (9)

யாழின் இளைஞர்களின் வன்முறைக் கலாச்சாரத்தினை இட்டு வெவ்வேறு வகையாக கருத்துக்கள் சமூகத்தில்முன்வைக்கப்படுகின்றது. இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்ற போக்கில் மாறுபட்ட சிந்தனைகளை அவதானிக்க முடியும்.
இளைஞர்களை கட்டுப்படுத்துவதற்கான தீர்வாக அதிகாரம் பயன்படுத்த வேண்டும் என்றும் இது அதிடிரப்படையைக் கொண்டு அவர்ளை அடக்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. மாவட்டத்தில் கண்காணிப்பு கமெரா, சோதனைச் சாவடி அமைத்தல், திடீர் சோதனை என ஒரு கெடுபிடியாக பாதுகாப்பு அறிமுகப்படுத்த வேண்டும் என்று பொதுப் புத்தியில் இருந்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதே போல புலிகள் இருந்திருந்தால் இவ்வாறான ‘‘தீய‘‘ செயல்களையும், முறைகேடுகளை ஏற்பட்டிருக்காது என்று கருதுகின்றார்கள்.
இது போன்ற சிந்தனை என்பது கிட்டத்தட்ட திறந்த சிறைச்சாலையில் வாழ நிர்ப்பந்திக்கப்படும் நிலையை ஒட்டியதாக கருத்துக்கள்

முன்வைக்கப்பட்டது. இந்தச் சிந்தனை என்பது ஒன்றும் புதிதல்ல. இது சமூகத்தின் பொதுப்புத்தியில் இருந்து வெளிவருவதாகும். ஆனால் ஜனநாயக மரபுவழி உரிமை என்பது இன்றையக் காலத்தில் அரசியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டு நிறுவனமயப்படுத்தப்படுகின்றது. ஜனநாயக மரபுவழி உரிமை பற்றிய போதிய பரீட்சையும், விளக்கமும், அது பற்றிய பிரஞ்ஞையும் இல்லை. ஆனால் தமிழ் மக்கள் வாழும் தாயக நிலப்பரப்பு என்பது ஏற்கனவே இராணுவ முகாம்களின் பிரசன்னமும், புலனாய்வுக் கட்டமைப்பின் கீழ் தான் தமிழ் மக்களின் தாயகமும் வாழ்வும் உள்ளது. இவ்வாறு இருக்கையில் இன்னுமொரு காவல் கட்டமைப்பு என்பது மேலும் ஒடுக்குமுறைக்குத் தான் வழிவகுக்கும்.
யாழ்ப்பாணத்தைச் சுகந்திர பிரதேசமாக மாற்றிய பின்பே யாழ்பாணத்தை விட்டு செல்வேன் என சர்வோதய அமைப்பின் நிகழ்வில் யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி கலந்து கொண்டுள்ளார்.
அங்கு பேசிவர் யாழை மாற்றுவதற்கு தன்னுடன் இணைந்து அனைவரும் ஒத்துழைக்குமாறும், ஒரு வருடத்துக்குள் யாழ்ப்பாணத்தை 1970 ஆம் ஆண்டில் இருந்தவாறு மாற்றப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பெண்கள் நள்ளிரவில் கூட தாம் சுதந்திரமாக நடமாடுகிறோம் என குரல் எழுப்பும் போதே தான் யாழ் மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான சபதம் என்பது நீதிபதி என்ற நிலையில் பேச்சுக்கள் என்பது (protocol) நீதிமன்றத்தின் நிறுவன நெறிமுறைக்கு புறம்பானதாகும். இங்கு பொதுவாக நிகழ்வில் உள்ள அரசியல் பொருளாதார அமைப்பு என்பது நீதிபதி பதவியில் இருக்கின்ற போது இவ்வாறான பொதுவெளியில் கருத்துக் கூறுவது தவிர்க்கப்படுவது இயல்பானதாகும். தமிழர் தாயகத்தில் ஒரு அதிகாரகக் கட்டமைப்பை மறுக்கின்ற ஒடுக்கமுறை ஆட்சியமைப்பில் இவ்வாறான தன்முனைப்பான செயற்பாடுகளை ஒடுக்குமுறை அரசாங்கமும் – அரசும் பின்னால் இருந்து இயக்குகின்றது.
இறைமைக்காகவும், அதிகாரப் பரலாக்கம், இணக்கம் என்று வெவ்வேறு திசைகளில் பயணிப்பவர்களின் நோக்கத்தை இதன் ஊடாக திசைதிருப்பிவிடுகின்றது. வளர்ந்து வருகின்ற பொருளாதார அமைப்புக் கேற்ற நிறுவன அமைப்புக்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத ஒடுக்குமுறையை மேற்கொள்கின்ற அரச கட்டுமானம் என்பது இவ்வாறான தன்னியல்பான (நீதிபதியின்) நடவடிக்கைகளை செயற்பட மென்மேலும் ஊக்குவிக்கும். இவ்வாறான செயற்பாடுகளை பொதுப்புத்தி உள்ள அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், கருத்துருவாக்கிகளைக் கொண்டு நியாயப்படுத்தும், இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இராணுவம், பொலீஸின் செயற்பாடுகளை நியாயப்படுத்த இலகுவாக அமைந்து விடுகின்றது. மேலும் புலனாய்வு- இராணுவக் கட்டமைப்புகள் வாழும் மக்களை அரசியல் நீக்கம் செய்வது தவறானதாகும். பெரும்பாலான சமூக குற்றங்களின் பின்னணியில் இராணுவுப் புலனாய்வுப் பிரிவும், பொலிஸ் இருப்பதாக செய்திகள் வருகின்றன. அதே வேளை இவ்வாறு இராணுவ பிரசன்னம், புலனாய்வுக் கட்டமைப்பிற்கும் ஊடாக எவ்வாறு போதைப் பொருட்கள், மோதல்களும் அதற்கான ஆயுதங்களும் அதிகளவில் புழங்குகின்றது என்பதை அறிகின்ற போது அதன் பின்னால் உள்ள அரசியல் நிகழ்ச்சி நிரலின் உள்ளார்ந்த வேலைத்திட்டத்தை அறிந்து கொள்ள முடியும். (சமூகச் சீரளிவை ஏற்படுத்தி சமூகத்தின் உணர்வினையும், சமூகக் கட்டமைப்பை சிதைப்பதாகும்.)
அரச கட்டமைப்பை பாதுகாப்பது, இராணுவ பிரசன்னத்தைப் பாதுகாப்பது ஏனெனில் அரச நிறுவனம் என்பது நீதி, நிர்வாகம், இராணுவம் , நீதித்துறை உள்ளடக்கியதாகும்.
உண்மையில் அதுவல்ல. அதனை அனுமதிப்பது, தமிழ் தேசத்தின் இறைமைபற்றிய பிரஞ்ஞை, அதிகாரம் பற்றிய பிரச்சனைகளை திசைதிருப்புவதாகும்.
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் படை அதிகாரி இடையேயான மோதல் என்பது இரண்டு அரச நிறுவனங்களுக்கு இடைப்பட்டதாகும். இந்த மோதல் தெற்கில் இடம்பெற்றிருந்தால் அங்கு ஆட்சியாளர்களுக்கும் படைக்குமான மோதலாக அல்லது அதிகாரப் போட்டியாக கருத் முடியும். ஆனால் ஈழப் பகுதியில் நடைபெறுகின்றது என்பது அடக்குமுறையின் வடிவமாகும். ஈழப்பகுதியில் நடைபெறும் அடக்குமுறையை ஒரு தேனீர் விருந்தில் சமாளித்துவிட்டதாக பாவனை காட்டமுடியும். ஆனால் அடக்குமுறை வடிவம் மாறாப் போவதில்லை.
இவ்வாறான தேனீர் விருந்தில் பிரச்சனை தீர்ப்பதும் தேசியகீதம் தமிழில் பாடிய போது கண்ணீர் விட்டதைக் கூட அரசியல் முன்உதாரணமாக காட்டப்படுகின்றது. இது வெறும் கவர்ச்சிகர- சாகசச் சிந்தனை வடிவமாகும். இவைகள் சமூக இயக்கப் போக்கை அற்பமாக்கிவிடும் தந்திரத்தைக் கொண்டதாகும்.
அரசியல் முரண்பாடுகளை தேனீர் விருந்தின் மூலமும் மூடிய அறையினுள்ளும் பேசித் தீர்த்துவிட முடியும் என்றால் உலகில் எந்தப் பிரச்சனையும் இருக்க முடியுமா?
images (8)
உபகலாச்சாரம் என்றால் என்ன? உபகலாச்சாரம் எவ்வாறு உருவாகும் உருவாகின்றது? இது எவ்வாறு உருவாகுவதை தடுப்பது? என்ற அடிப்படையில் சிந்திக்க வேண்டும். மாறாக சமூகத்தினை மென்மேலும் பாதுகாப்புப் படையினரின் பிரசன்னத்தினாலும், சட்ட ஆட்சியினால் சாத்தியமாகுதில்லை. அனைத்துச் சமூகத்திலும் அனைத்துக் காலத்தில் சமூகத்தின் அமைதிக்குப் புறம்பான செயற்பாடுகள் இயல்பாக நடைபெற்றுத் தான் வந்திருக்கின்ற தாயினும் யாழில் செயற்கைத் தன்மையான ஊக்குவிக்கப்படுகின்றது. சமூகத்தில் எழும் சமூகப் பிரச்சனைகள் ஒன்றும் புதிய பரிமாணமாக எந்தச் சமூகத்திற்கும் இருந்ததில்லை. உபகலாச்சாரத்தினை விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால் சமூக விஞ்ஞானப் பார்வை என்பது அவசியமாகும்.
சட்டத்துறையை விட்டு விட்டு சமூகத் தளத்தில் இறங்கி பொதுசன வேலைகளின் ஊடாக செய்யவேண்டிய (சிவில்) விடங்களை செய்ய முடியும். ஆனால் சட்டத்துறையில் இருந்து கொண்டு சட்டவாதத்தினுள்- சட்டவரையறைககுள் முடிவுகளை தேடுவது தவறான பார்வையாகும்.
சட்டத்தினால் எந்த நாட்டிலும் மாற்றத்தை கொண்டு வந்துவிடவில்லை. இது சமூகத்தில் இருந்து உருவாகும் முன்னேறிய கருத்துக்களை முன்வைத்து செயற்படுவதன் ஊடாகத் தான் தீர்க்க முடியும். ஏற்கனவே இராணுவ- புலனாய்வுக் கட்டமைப்புகள் இருக்கின்ற போது இன்னுமொரு கட்டமைப்பை கேட்பது படு பிற்போக்குச் சிந்தனையில் வெளிப்பாடும் அபர்த்தமான கருத்துமாகும். மேலும் இராணுவ- புலனாய்வுக் கட்டமைப்புகள் இருந்து இவ்வாறு உருவாகும் உபகலாச்சாரத்தின் மூலத்தை கண்டறிவது அவ்வளவு சிரமமாக இருக்க முடியாது.

2009 வீழ்ச்சி என்பது தேசம் (Nation) ஆக்கிரமிப்புக்குள் வீழ்ந்தது மட்டுமல்ல. அந்த வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டு சமூகத்தின் பிற்போக்குச் சிந்தனையைக் கொண்டு சமூகத்தின் பிற்போக்குச் சிந்தனையை அடித்தளமாகக் கொண்ட சக்திகளே தலைமை தாங்குகின்றன. சமூகப் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுகுவது- சிந்திப்பது- செயற்படுவது- செய்முறை போதிப்பது என்ற விடயங்களை சிந்திக்காத பின்னோக்கிய நிலையில் தான் சமூக இயக்கப் போக்கு உள்ளது.
சமூகத்தின் தேவைகளை தேடுவது- ஒருங்கிணைப்பது- பூர்த்தி செய்வது என்ற செயல்முறை அற்ற சமூகப் பிரிவு தலைமையாகக் கொண்டது.
அடிப்படையில் தேசம் எவ்வாறு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றது என்ற அரசியல் பார்வை அற்றவர்கள்.
சமூகத்தை முன்னோக்கிச் சிந்திக்க வைக்க வேண்டும் என்ற பிரஞ்ஞை இல்லாதவர்களாக அரசியல் தலைமை உள்ளது. சமூகத்தின் முன்னோக்கிய சிந்திக்க விடாத எந்தச் சக்தியும் எதிர்க்கப்பட வேண்டியவர்களே. இந்த சக்திகள் வெவ்வேறு வேடம் கொண்டு இருக்கின்றார்கள். அனைவரும் தத்தம் சிந்தனைகளே உயர்ந்ததாக பிரகடனப்படுத்துகின்றார்கள். மக்கள் நலன், தேச நலனில் பிரஞ்ஞை அற்றவர்களின் குறைபாடுகளை பயன்படுத்தி மக்களையும் தமிழ் தேசத்தின் இறைமை பற்றிய சிந்தனையும் அதிகாரத்தில் இருக்கும் சிங்கள- பொளத்த பேரினவாத (chauvinistic) ஆட்சியாளர்கள் குரங்காட்டி குரங்கை ஆட வைப்பது போல ஆட்டுவிக்கின்றார்கள்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net