முதலாவது தமிழிச்சி என்ற பெருமையை தாருங்கள்.. சமந்தா ரட்ணம்

samantha-Ratnam-415x260
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கீழ்சபை மற்றும் செனட் சபைகளுக்கான இரட்டைத்தேர்தலில் போட்டியிடும் சில மெல்பேர்ன் வேட்பாளர்கள் மெல்பேர்ன் தமிழ் சமூகத்தினரை சந்தித்துள்ளனர்.

அழைப்பு விடுக்கப்பட்டவர்களும் முன்பதிவு செய்து கொண்டவர்களும் மாத்திரம் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.

இந்த சந்திப்பு தமிழ்தாய் வாழ்த்து, அவுஸ்திரேலிய கீதம் என்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் முதலில் லேபர் கட்சியின் வேட்பாளர் ஸ்டெப்னி உரையாற்றுகையில், தனது குடும்பமும் கிறீஸ் நாட்டிலிருந்து இங்கு அகதியாக வந்த குடும்பம் தான். இப்போது இருக்கும் ஆட்சியில் மாற்றம் வேண்டும். அதற்கு லேபர் கட்சியே ஒரு வழி என்றும், தான் போட்டியிடும் தொகுதிக்கு தானே சிறந்த தெரிவு என்று கூறியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து கிறீன் கட்சியின் சார்பில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றுக்கு போட்டியிடும், இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட முதல் தமிழ் நாடளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை ஈட்டுவதற்கான வெற்றிப்பாதையில் தடம் பதித்திருக்கும் சமந்தா ரட்ணம் உரையாற்றியுள்ளார்.

“காலவரையற்ற தடுப்புக்காவல், தொடரும் அகதிகள் பிரச்சினை, நவ்ரூ – மானஸ் என்று அகதிகளை அனுப்புவது ஆகிய பிரச்சினைகள் கொடுமையானவை. 1987 ஆம் ஆண்டு நான் இந்த நாட்டுக்கு வந்த போது இப்படியான பிரச்சினைகள் இருந்திருந்தால் நான் இவ்வாறான ஒரு அரசியல்வாதியாக வந்திருக்க முடியாது.

எனக்கும் எனது குடும்பத்துக்கும் அவுஸ்திரேலியா தான் அனைத்தையும் தந்தது. ஆனால், அப்படிப்பட்ட செழிப்பான நாட்டினை தற்போதைய லிபரல் ஆட்சி பின் கொண்டு செல்லப்போகிறது. அதனை விடக்கூடாது.

விக்டோரியாவிலிருந்து முதல் முறையாக அடம் பான்ட் ஒற்றை கிறீன் நாடாளுமன்ற உறுப்பினராக சென்று எத்தனையோ காரியங்களை செய்திருக்கிறார். இந்த முறை என்னை அங்கு அனுப்புங்கள்.

பல மாற்றங்களை செய்து காட்டுவேன். அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றுக்கு செல்லும் முதலாவது தமிழிச்சி என்ற பெருமையை தாருங்கள்” என கூறி பேச்சை நிறைவு செய்துள்ளார்.

மேலும் கிறீன் கட்சியின் வேட்பாளர் ஜோஷ்வா மற்றும் செனெட் சுயேட்சை வேட்பாளர் ஜெபா ஆகியோர் உரை ஆற்றிமை குறிப்பிடத்தக்கது.
துளியம்

Copyright © 8596 Mukadu · All rights reserved · designed by Speed IT net