எங்களுடைய பொலீஸ்மா அதிபர் என வடக்கு மக்கள் அச்சமின்றி கூறவேண்டும்.. பூஜித ஜயசுந்தர

இவர் எங்களுடைய பொலீஸ்மா அதிபர் என வடக்கு மக்கள் அச்சமின்றி கூறவேண்டும் என்று பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
Pooji_CI
கடந்த சனிக்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அவர் மாவட்டச் செயலகத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளர்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
வடக்கு மாகாணத்தில் பிரதி பொலீஸ்மா அதிபராக கடமையாற்றியிருக்கின்றேன். எனவே இந்தப் பிரதேசத்தின் நிலைமைகளை நான் நன்கறிவேன், பல தடவைகள் இதற்கு முன் சிவில் அமைப்புக்களை சந்தித்திருக்கிறேன் எனவே வடக்கு மக்கள் அச்சமின்றி கூற வேண்டும் இவர் எங்களுடைய பொலீஸ்மா அதிபர் என்று. எனத் தெரிவித்த அவர் தான் பதவி ஏற்று பின்னர் இரண்டாவது விஜயமாக வடக்கு மாகாணத்திற்கு வந்திருக்கிறேன். என்னுடைய விஜயம் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. எனது முதலாவது விஜயம் மத்திய மாகாணத்திற்கானதாக அமைந்திருந்தது. நான் எனக்கு கீழ் உள்ள 84 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களின் நலன்கள் அவர்களின் தேவைகள் உள்ளிட்ட விடயங்களையும் கவனிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஜந்தாண்டு திட்டம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பொலீஸ்துறையின் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், சட்டம் மற்றும் ஒழங்கை பாதுகாக்கின்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க கூடிய வகையில் திட்டங்களை முன்னெடுப்பதோடு, நாட்டில் இடம்பெறுகின்ற குறிப்பாக வடக்கில் இடம்பெற்ற வாள்வெட்டு,கோஸ்டி மோதல்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி ஒரு அமைதியான சூழல் ஏற்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net