13 அடி நீளமான நாகத்தின் உடல் அருங்காட்சியகத்தில்

article_1466605302-article_1466492012-1(3055)
தெமட்டபிட்டிய தம்மிககம பிரதேசத்தில் தென்னை தோட்டத்துக்கு மத்தியில் இறந்த நிலையில் இருந்த 13 அடி நீளமான நாகம் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று வெளியான செய்தியை அடுத்து, தேசிய அருங்காட்சியக தோல்பொருள் பிரிவு அதிகாரிகள் குறித்த இடத்துக்கு இன்று சென்றிருந்தனர்.

தென்னை தோட்டத்தின் உரிமையாளர், இழைகளை வெட்டுவதற்காக சென்றபோது, சுமார் 10 அடிக்கும் அதிக நீளமுடைய நாகம் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முதல் தகவல்கள் தெரிவித்திருந்தன.

எனினும் இன்று சென்ற அதிகாரிகள் குறித்த நாகத்தின் நீளம் 13 அடி என்று கூறுகின்றனர்.

இதற்கு முன்னர் இவ்வளவு நீளமாக நாகம் இலங்கையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கும் அவர்கள், இந்த 13அடி நீளமாக நாகத்தின் உடவை பதப்படுத்தி அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்த தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, இவ்வாறான நாகங்களை யாராவது கண்டால் அதுதொடர்பில் தமக்கு தகவல்களை தருமாறு தொல்பொருள் திணைக்களத்தினர் அறவுறுத்தியுள்ளர்.

அதிக வயது காரணமாக இந்த நாகம் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.
தமிழ் மிரர்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net