புதுமையை நோக்கிய சமூகப்பாய்ச்சலா?தெய்வீகனின் இவளதிகாரம்

images4

புதுமையை நோக்கிய சமூகப்பாய்ச்சல் எல்லாக்காலத்திலும் எங்களுக்குள் உள்ளூரத்தான் செய்கின்றது.அதை எதிர்த்தும்,தட்டிக்கொடுத்தும்,நடு நிலை பேணியும் கருத்துருவாக்கங்கள் சமூகப்பிரதிகளாக நாளந்தம் முளைகட்டுகின்றது. அக்கருத்துருவாக்கங்களின் முளுவதையும் வரவேற்பறைமட்டும் அனுமதிக்களாம்.எதை உள்ளே விடவேண்டும் என்பது கருத்தேற்பாளன் அறிவுக்கூர்மையை பொறுத்ததே.

இவளதிகாரம் என்ற சிறுகதையின் இரண்டு கதை மாந்தர்கள் ஜெனீட்டா,அனீட்டா தங்களுக்குள் நிகழ்த்தும் கருத்தாடல் மூலம் கதையில் மூலத்தை கொண்டு செல்லகின்றார்கள்.

இருவரும் மேற்படிப்பிற்காக அவுஸ்ரேலியாவுக்குச்செல்கின்றார்கள்.அங்கே தொடர்ந்து படிப்பதற்காக கட்டணம் செலுத்தவேண்டித தேவை ஒன்று உள்ளது.ஜெனிட்டாவிற்கு ஊரிலிருந்தே பணம் வருகின்றது,அது அவள் படிப்பிற்கான கட்டணத்திற்கே போதாமல்போகின்றது.பகுதிநேரவேலைக்குச்செல்கின்றாள்.அதுவும் அவள் தேவையை பூர்த்திசெய்வதாக இல்லை.ஏதோவோர்அடிபடையில் தன் கல்வியை முழுமை செய்துவிட வேண்டும் என்ற உந்தலில்.இலகுவாக பணம் சேர்த்துவிடவேண்டும்என்று ஆண்களுடன் பழகுதல்,அவர்களுடன் உடல்லுறவிலீடுபடுதல் என்ற நிலைப்பாட்டுக்கு வருகின்றள்.அவள் மனம் விரும்பிச்செய்யவில்லையாயினும்.அவள் நண்பி அனிடா அவளை சுட்டிக்காட்டும்வேளையில். தன் பக்கத்தின் சாட்சியாய் தனக்குள் உறைந்துள்ள நியாயத்தை நண்பியின் வாதத்தின்மீது முன்வைக்கின்றாள்.அவள் முன்வைக்கும் நியாயங்கள், அவள் செயலின்மீதான நியாயப்படுத்தலாகவே இருக்கின்றது,அந் நியாயப்படுத்தல்கள் எவ்வாரான சமூகநலனுமற்ற தனிமனித விருப்பங்களாகவே கதைக்குள் விம்பமாகின்றது.தனி மனிதவிருப்பங்கள் எவ்வாறு சமுகத்தராசை செம்மையாக்கமுடியும் என்பதற்காக அனிட்டாவின் பாத்திரம் உருவாக்கப்படுகின்றது.இரண்டு முரண் பாத்திரங்கள் கதையோட்டதினும் ஒரு சமநிலையை எழுத்தாளர் பின்பற்றுகின்றார்.

அனீட்டாவின் கல்விச்செலவிற்காக லண்டனில் இருந்து பணம் வருகின்றது.காணத செலவுகளை பகுதி நேரவேலையில் ஈடு செய்கின்றாள். இக்கதையின் வாசிப்பின் நேரடித்தாக்கம் நியப்படுத்தப்பட்ட தேவை கருதிய பாலியல்சுதந்திரமானதாக இருக்கிறதெனக்கொண்டால் அது வசிப்பின் ஆழ ஊடுருவாத்தனமே.

கதையாசிரியர் இதன் பின்னால் உள்ள சமூகப்பிரச்சனையே முன்வைக்கின்றார். பொற்றோரின் கவனத்துக்கப்பால் பிள்ளைகள் செல்லும்போது அவர்கள் தேவைகள் சமூகத்தின் எந்தொரு ஒழுங்குகளையும் கவனிக்கப்போவதில்லை.இது தனிக்குடும்பக்குழப்பங்களைத்தாண்டி ஓர் சமூகப்பிரச்சனையாக உரு மாறுகின்றது.கதையில் குறிப்பிட்டது போன்று வெறுமனையே பெண்களைமட்டுமல்ல ஆண்களையும் உள்வாங்குகின்றது.

இரண்டாவது சமூக ஒழுங்குகள் எல்லாமனிதனுக்கும் சமமானதாக கட்டமைக்கப்படவில்லை எங்கள் வல்லமைக்கு அப்பால் எதையாவது ஒன்றை பெறவேண்டுமானால் நாங்கள் எதுவானாலும் ஒன்றை இழப்பதற்கு தயாராக இருக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்கு மாற்றப்பட் ட மெய்யை பட்டவர்த்தனமாக செல்லியிருக்கின்றார் உடலின்பக்கழிப்பின் தோரனையில் கதையின் ஆரம்பத்தை தொட்டிருத்தாலும் கதாபாத்திரங்களுக்கு பின்னால் நியாயமான பல கேள்விகளை விட்டு சென்றுருக்கிறார் இவ்வாறான கதைகள் நடக்கவில்லை என்று சொல்லி நழுவிச்செல்வதைவிட இதுபோன்ற கதைக்களங்களை உருவாக்கும் பிற்காரணிகளை இனங்காண்போம்.

ப.பார்தீபன்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net