துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல் : 28 பேர் பலி

17643_ataturk-attack-2
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். 147 பேர் காயமடைந்துள்ளனர்.
17643ataturk-attack
இன்று (புதன்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலை துருக்கி நீதித்துறை அமைச்சர் பெகிர் போஸ்டாக் உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து இஸ்தான்புல் ஆளுநர் வாசிப் ஷாஹின் கூறியதாக அந்நாட்டின் என் டிவி வெளியிட்டச் செய்தியில், “இஸ்தான்புல் விமானநிலையத்தில் 3 தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்” எனக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை அமைச்சர் பெகிர் மேலும் கூறும்போது, “எங்களுக்கு கிடைத்துள்ள முதற்கட்ட தகவலின்படி சர்வதேச முனையத்துக்குள் நுழைந்த தீவிரவாதி ஒருவர் முதலில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு பின்னர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தததாகத் தெரிகிறது” என்றார்.

மற்றொரு அதிகாரி கூறும்போது, “சர்வதேச விமான நிலைய நுழைவு வாயிலில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். தீவிரவாதிகளை அடையாளம் கண்டு போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியவுடனேயே அவர்கள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்” என்றார்.

ஐ.எஸ். சதியா?

துருக்கி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
த ஹிந்து

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net