கரும்புலி தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் கரும்புலி நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டு உள்ளது.
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள பிரத்தியோக இடத்தில் இன்று காலை கரும்புலி நாள் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டு உள்ளது.
அதேவேளை மாணவர் விடுதி உட்பட பல்கலைகழக வளாகத்தினுள் சில இடங்களில் “தமிழீழ மக்களுக்கு ஓர் அறிவித்தல்” எனும் தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.
அந்த சுவரொட்டிகளுக்கு தமிழீழ மக்கள் படை எனும் அமைப்பு உரிமை கோரியுள்ளது.