மூத்த கலைஞர் மரிக்கார் ராம்தாஸ் காலமானார்.

இலங்கையின் மூத்த கலைஞர் மரிக்கார் ராம்தாஸ் காலமானார்.
Marikkar_CI

இலங்கை தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கிய தடத்தை பதித்த ராம்தாஸ் தனது 69ம் வயதில் காலமானார்.

சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த ராம்தாஸ் சென்னையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது இயற்கை எய்தினார்.

இலங்கையின் நாடகக்கலை, திரைப்படம், வானொலி ஒலிபரப்பு, தொலைக்காட்சி என பல்வேறு பரிமாணங்களில் தன்னை மிளிரச்செய்த அற்புத கலைஞராக ராம்தாஸ் போற்றப்படுகின்றார்.

அன்னார் நடித்து வெளியான கோமாளிகள் திரைப்படம் மிகவும் பிரபல்யமான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

அன்னாரின் இழப்பு தமிழ் கலைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளது.
குளோபல் தமிழ்

Copyright © 7316 Mukadu · All rights reserved · designed by Speed IT net