இராணுவ சூழ்ச்சித் திட்டம் முறியடிக்கப்பட்டமை மகிழ்ச்சி – பிரதமர்

ranil new one_CI
துருக்கியில் இராணுவ சூழ்ச்சித் திட்டம் முறியடிக்கப்பட்டமை மகிழச்சியளிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

துருக்கியில் இராணுவ சதிப் புரட்சி தோற்கடிக்கப்பட்டமை உலகில் ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து தரப்பினரதும் மகிழ்ச்சிக்கு ஏதுவாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவ சூழ்ச்சித் திட்டத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தை முடக்குவதற்கு துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் மிக்க தருணத்தில் இலங்கை அரசாங்கமும் நாட்டு மக்களும் துருக்கி அரசாங்கத்துடன் இணைந்திருப்பதாகவும் அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net