யாழ்ப்பாணம் அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழாவின் போது ஆலயத்திற்கு சீருடைகளுடன் வருகை தந்த நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆலய தேர் வடத்தினை பக்தர்களுடன் இணைந்து இழுத்தனர்.
அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
அதன் போது ஆலயத்திற்கு வருகை தந்த நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் , தேர் இழுக்க தொடங்கியதும் தமது மேலாடைகளை கலைந்து விட்டு , தமது காலணிகளை கழட்டி விட்டு தாமும் பக்கதர்களுடன் இணைந்து தேரினை இழுத்தனர்.
அதேவேளை ஆலயத்திற்கு வருகை தந்த சில இராணுவத்தினர் தமது மேலாடைகளை கலையாமலும் , தமது காலணிகளை (சப்பாத்துக்களை) கலையாமலும் தேரோடும் ஆலய வீதிகளில் நடமாடித்திரிந்தனர்.