போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது – இயக்குனர் சேரன்

Evening-Tamil-News-Paper_11273920537
இயக்குனரும், நடிகருமான சேரன் இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தயாரிப்பாளர்கள் திருட்டி டிவிடியால் கஷ்டப்படுவதை பற்றி பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள், போலீசும் அதை கண்டுகொள்ளவில்லை.

தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது. ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான் என்று அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள் அப்படினு சொல்றாங்க.

இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம். அவர்களில் சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது என பேசியுள்ளார் சேரன்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net