பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா, உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். பாலமுரளி கிருஷ்ணா, திரைத்துறையிலும் தன் முத்திரையைப் பதித்தவர். 400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள பாலமுரளி கிருஷ்ணா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் பாடியுள்ளார். பக்த பிரகலாதா என்கிற தெலுங்குப் படத்தில் நாரதராக நடித்தார்.1976-ல் சிறந்த பாடகருக்கான விருதை, ஹம்சகீதே என்கிற கன்னடப் படத்துக்காகப் பெற்றார். 11 வருடங்கள் கழித்து, மாதவச்சாரியா என்கிற படத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
2009-ல் வெளியான பசங்க படத்திலும் அன்பாலே அழைக்கும் வீடு என்கிற பாடலைப் பாடினார். 1977-ல் கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையமைப்பில் இவர் பாடிய சின்ன கண்ணன் அழைக்கிறான் பாடல் மிகவும் புகழ்பெற்றது.