மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 70 நாட்களுக்கு மேலாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனது 68வது வயதில் இன்று இரவு காலமானார்.
இந்நிலையில். போயஸ்கார்டன் இல்லத்தில் முதல்வரின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறவுள்ளதாகவும், பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்படவுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், நாளை மாலை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.