“நெருப்பாற்றில் நீந்தியவர்கள்” அனுபவ பகிர்வு நூலும் “ஒரு போராளியின் இரவு” கவிதை தொகுப்பும் வெளியீட்டு நிகழ்வு .

இன்று “தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை” ஏற்பாட்டில் பாரீஸில் நடைபெற்ற சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி போராளிகள் எழுதிய “நெருப்பாற்றில் நீந்தியவர்கள்” அனுபவ பகிர்வு நூலும் ,”ஒரு போராளியின் இரவு” கவிதை தொகுப்பும் வெளியிடப்பட்டது …

குறிந்த நேரத்தில் “முகடு” ஆசிரியர் வண்ணனின் தலைமையில் ஆரம்பித்த நிகழ்வு அகவணக்கம் மாவீர்கள் நினைவு சுடர் ஏற்றால் லெப்டினன்ட் அகமகனின் தாயார் ஏற்றிவைக்க, மலர் வணக்கத்தை மாவீரர் சகோதரர் செலுத்தினார் பின்னர் வண்ணனின் தலைமை உரையை தொடர்த்து நெருப்பாற்றில் நீந்தியவர்கள் நூலை பற்றி அதன் தேவைகள் பற்றி ஈழ உணர்வாளர் “சிவா சின்னப்பொடி” அவர்கள் சிறிய உரையாற்றினார்,அதனை தொடர்த்து முன்னாள் போராளி நாயகன் அவர்கள் சமகால எழுத்துலகம் பற்றி அனுபவங்களை பகிர்த்தார் ..
தொடத்து நூல் வெளியீடு செய்யப்பட்டது “நெருப்பாற்றில் நீந்தியவர்கள்” நூலை முன்னாள் போராளி வெளியீட்டு வைக்க மாவீரன் அகமகனின் தாயார் பெற்றுக்கொண்டார் ,தொடர்த்து வட்டக்கச்சி இராமநாதபுரம் ஒன்றிய உறுப்பினர் ரஜனி சிறப்பு பிரதியை பெற்றுக்கொண்டார் …

பின்னர் முன்னாள் போராளிகள் தங்கள் அனுபவங்களை பகிர்த்து கொள்ள வேண்டும் என “மாஸ்டர் ஜெகன்” அவர்கள் சிறிய உரையை நிகழ்த்தினார்,சிறிய தேனீர் இடைவேளையின் பின்னர் மீண்டும் நிகழ்வு ஆரம்பம் ஆனது …

“ஒரு போராளியின் இரவு” கவிதை தொகுப்பை “கவிஞர் கோ நாதன்” வெளியீட்டு வைக்க சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி தளபதி கேணல் கோபித் சகோதரர் பெற்றுக்கொண்டார் ,பின்னர் கவிதைகளின் தற்போதைய நிலை பற்றி “முகடு” “ஆசிரியர் பார்த்தீபன்” உரை நிகழ்த்தினார் தொடர்த்து கலந்துரையாடல்கள் ;கேள்விகள்; சமகால அரசியல் நிகழ்வுகள்; முன்னாள் போராளிகள் தற்பொழுது எதிர்கொள்ளும் பிரச்சினைகள்; அரசியல் கைதிகள் விடுதலை; என ஆரோக்கியமான ஓர் பொதுவெளி விவாதத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net