அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு சிறந்த பெறுபேறுகள்
வெளியாகியுள்ள தரம் ஜந்து புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளன.
71 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 15 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதோடு,மாணவன் சூ.சத்தியன் 191 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 9ம் நிலையை பெற்றுள்ளன.
அத்தோடு 70 புள்ளிக்கு மேல் நூறு வீத சித்தியும், 100 புள்ளிக்கு மேல் 90 வீத சித்தியும் பாடசாலை பெற்றுள்ளதோடு, 65 மாணவர்கள் நூறு புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.