இந்தியா – நேபாளம் எல்லைப்பகுதியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
இந்தியா – நேபாளம் எல்லைப்பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தில் 4.5 ரிக்டர் அளவு கொண்ட மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) 12:45 மணியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டது என இந்திய புவியியல் அறிவியல் அமைச்சகம் கீழ் இயங்கும் என்.சி.எஸ். தெரிவித்துள்ளது.