பாடசாலை கல்வியே காரணம் – கிளிநொச்சியில் முதல் நிலை பெற்ற மாணவன் தேனுசன்
முற்று முழுதான பாடசாலைக் கல்வியே நான் மாவட்டத்தில் முதல் நிலை எடுப்பதற்கு காரணமாக அமைந்தது என தரம் ஜந்து புலமை பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் பெற்ற மாணவனான கனகலிங்கம் தேனுசன் தெரிவித்தார்
கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவனான தேனுசன் ஏனைய மாணவர்கள் போன்று பிரபல்யமான தனியார் கல்வி நிலையங்களுக்கோ, பிரத்தியேக வகுப்புக்களுக்கோ சென்றது கிடையாது.
அமைதியான கற்றல் செயற்பாடுகள், வகுப்பிலும் கற்றல் செயற்பாடுகளில் எப்பொழுதும் முதல் நிலையிலேயே இருந்து வந்துள்ளான் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையில் ஆசிரியர்கள் கற்பிக்கும் போது அதிக கவனம் செலுத்துவேன், அவர்கள் வழங்குகின்ற பயிற்சிகளை தவறாது செய்து முடிப்பதோடு, சிறிது நேரம் கற்றாலும் அவற்றை ஞாபகபப்படுத்தி வைததிக்கொள்வேன். என்றான் தேனுசன்.