சூரிய குடும்பத்தில் மற்றுமொரு புதிய கோள் கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்தில் மற்றுமொரு புதிய கோள் கண்டுபிடிப்பு

சிறிய கோளொன்று புளுட்டோவிற்கு அப்பால் நமது சூரியனைச் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“Goblin” என அழைக்கப்படும் “2015 TG387” எனும் இந்த கோளானது 2015 இல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், கடந்த 1 ஆம் திகதியே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பனிப்பந்து போல காட்சியளிக்கும் இக் கோளானது 300 கிலோமீட்டர்கள் விட்டமுடையது. இதன் ஒழுக்கு புவிக்கும் சூரியனுக்குமிடைப்பட்ட தூரத்தைப் போல 2,300 மடங்கு தூரமானது.

மிக நீண்ட ஒழுக்கில் சூரியனை வலம்வரும் இக்கோளானது அதன் ஒழுக்கில் பயணிக்க கிட்டத்தட்ட 4,000 வருடங்களை எடுத்துக்கொள்கிறது.

ஹவாய் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டிருந்து Planet X இற்கான தேடுதல் வேட்டையின் போதே இக்கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Planet X என்பது ஒரு அனுமானக் கோள், இது நமது சூரியத் தொகுதியின் எல்லையில் இருக்கலாம் என நம்பப்டுகிறது.

இதன் பாரிய பருமன் காரணமாகக் கொண்டுள்ள ஈர்ப்புசக்தியின் காரணமாக இது “Goblin” போன்ற சிறு கோள்களை அண்மிக்கும் போது அவற்றுக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net