பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை வெற்றி!

பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை வெற்றி!

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிருத்வி – 2 ஏவுகணை அணுகுண்டு உள்ளிட்ட 1,000 கிலோ ஆயுதங்களை சுமந்து சென்று, 350 கி.மீ தூரமுள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகில் உள்ள சண்டிப்பூரில் பிருத்வி-2 ஏவுகணை சோதனை நேற்று(சனிக்கிழமை) இரவு நடத்தப்பட்டது.

மொபைல் லாஞ்சர் கருவியில் இருந்து செலுத்தப்பட்டதும், திட்டமிட்டபடி பறந்து சென்று இலக்கை பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளது.

ஏவுகணைத் தாக்குதலின் துல்லியத் தன்மை உள்பட அனைத்து செயல்பாடுகளும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு முகமையின் கண்காணிப்பு நிலையங்கள், ரேடார் சாதனங்கள் உள்ளிட்டவற்றால் கவனம் செலுத்தப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை கடந்த பெப்ரவரி மாதம் 21-ம் திகதி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net