இதுவும் ஆன்மீகமே!

இதுவும் ஆன்மீகமே!

ஆன்மீகம் என்பது ஒரு மனிதனை நல்வழிப்படுத்தவும், அவன் மனதை அமைதிப்படுத்தவும் மேற்கொள்ளும் நடைமுறையாகும்.

வெளிப்படையாக விபூதி தரித்து, சந்தனக்குறியுடன் திரிந்தால் ஆன்மீகம் எனக் கூறிவிட முடியாது என்பதே உண்மை.

ஆன்மீகத்தை நேசிக்கும் ஒருவரின் உள்ளம் தூய்மையாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காமை, குற்றம் செய்பவர்களையும் மன்னிக்கும் இயல்பு உடையமை, நம்பியவர்களுக்கு துரோகம் செய்யாமை, தினமும் இறைவனை தரிசித்தல்,உயிரிணங்களை கொன்று உண்பதை தவிர்தல், சக பாலின மனிதனை மதித்தல், உண்மை பேசுதல், நேர்மையாக இருத்தல், என நல் ஒழுக்கத்தினூடாக மனதை தூய்மையாக வைத்திருத்தல் என்பது ஒரு வகை ஆன்மீகமே.

இதுதவிர, ஆடம்பரத்தை நேசிக்காமை மற்றும் அடுத்தவர்களுக்கு உதவும் குணமுடையமை, ஆசையை துறத்தல் என்பனவும் ஆன்மீகத்தில் மிகச்சிறந்த நடைமுறையாகும்.

உதாரணமாக, நாம் உணவு உண்ணும் போது வயிறு நிரம்பிவிட்டது என்றால், எமது சாப்பாட்டை நிறுத்திவிட வேண்டும்.

உணவு இருக்கிறது என்பதற்காக அளவை மீறி சாப்பிடுவதும் ஒருவகை பாவமே.

காரணம், நாம் அளவிற்கு மீறி உண்பதும் யாரோ ஒருவருடைய உணவை பறித்து உண்பதற்கு சமமாகும்.

அதே போன்று பசி என்று கேட்பவர்களுக்கும், விலங்குகளுக்கும் நாம் உண்ணும் உணவில் பாதியை கொடுத்துண்ணுதல் நாம் தேடும் புண்ணியமாகும்.

இது தவிர, ஒருவருக்கு உதவி செய்ய நாம் பணக்காரராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எம்மிடம் உள்ளதை அடுத்தவர்களுக்கு கொடுப்பதே மிகப்பெரிய உதவியாகும்.

எனவே உதவுதல் என்பதற்கு நல் மனம் தேவை. அந்த நல் மனம் ஏற்பட்டாலே நீங்கள் ஆன்மீகத்தை தேட வேண்டிதில்லை. அதுவே உங்களுக்குள் குடிவந்துவிடும்.

ஆகவே அடுத்தவர்களை மகிழ்வித்து, உதவி செய்து, அடுத்தவர்கள் மனதை புன்படுத்தாதும், அவர்கள் கௌரவத்தை பாதிக்காமலும் நாம் வாழ்வது ஒருவகை ஆன்மீகம் என்பதால் வெளிப்படைக்கு ஆன்மீகத்தை ஆடம்பரம் செய்யாமல், சிறந்தமுறையில் நல் மனிதர்களாக வாழ்ந்திட கற்றுக்கொள்வோம்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net