சிங்கத்தின் வாயில் புலிகளின் போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி சிங்கத்தின் வாயில் புலிகளின் போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி அனுராதபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (05.10) மதியம் 12.00 மணியளவில் ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய் , புதிய சி.ரி.ஏ சட்டத்தினை உடனே நிறுத்து என்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய தமிழ் பதாதைகளுடனும் சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பாதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் , முற்போக்கு கூட்டணி , அனுராதபுர விவசாய அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன.

போராட்டத்தின் போது வீதி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாமென போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் தள்ளியதினால் பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கிடையே சிறு கருத்து முரண்பாடு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net