வவுனியா நகரசபையினால் சோலைவரி அறவீட்டு நடவடிக்கை ஆரம்பம்!

வவுனியா நகரசபையினால் சோலைவரி அறவீட்டு நடவடிக்கை ஆரம்பம்!

வவுனியா நகரசபையினரால் கடந்த பல வருடங்களாக சோலை வரி பெற்றுக்கொள்ளாத வர்த்தகர்களுக்கு எதிராக நேற்றும் இன்றுமாக நகர் பகுதிகளில் நகரசபை உத்தியோகத்தர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை 2018.09.06.07 இலக்க சபை தீர்மானத்திற்கு அமைய நகரசபை செயலாளருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கு அமைவாக இது வரை வவுனியா நகரசபைக்கு சோலை வரி நிலுவை செலுத்தப்படாதவர்களுக்கு எதிராக நகரசபை கட்டளைச்சட்டம் அத்தியாயம் 255 பிரிவு 170 இன் பிரகாரம் நகரசபை உத்தியோகத்தர்களினால் நடுக்கட்டு நடவடிக்கையாக ஆடம்பரப் பொருட்கள் கையேற்கப்பட்டு அவற்றை ஏல விற்பனை செய்வதன் மூலம் சோலை வரி நிலுவையைச்சீர் செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு நகரிலுள்ள பல வியாபார நிலையங்களுக்கு எதிராக நேற்றும் இன்றுமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Copyright © 7392 Mukadu · All rights reserved · designed by Speed IT net