வரமராட்சியிலிருந்து வெளியேறும் மீனவர்கள்!

வரமராட்சியிலிருந்து வெளியேறும் மீனவர்கள்!

வட­ம­ராட்சி கிழக்­குப் பகு­தி­யிலும் யாழ். மாவட்ட நிர்வாக பகு­திக்­குள் தங்­கி­யி­ருந்து கட­லட்டை பிடிப்­ப­வர்­க­ளை­யும் 48 மணி நேரத்­தில் வெளி­யே­று­மாறு பிர­தேச செய­லர் அறி­வித்­தல் விடுத்த நிலை­யில் பெரும்­பா­லான வாடி­கள் அகற்­றப்­பட்டு வெளி­யே­றி­வ­ரு­வ­தாக வட­ம­ராட்சி கிழக்கு சமா­சத் தலை­வர் தெரி­வித்­தார்.

வட­ம­ராட்சி கிழக்­கில் தங்கி நின்று கட­லட்டைத் தொழி­லில் ஈடு­ப­டும் வெளி மாவட்­டத்­த­வர்­கள் சுமார் 2 ஆயி­ரம் பேர் அரச நிலத்தை அனு­ம­தி­யின்றி ஆக்­கி­ர­மித்து வாடி அமைத்துத் தங்­கி­யி­ருந்­த­னர்.

கிளி­நொச்சி மாவட்ட நீதி­மன்ற எல்­லைக்­குள் வாடி அமைத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்டு, அங்கிருந்த மீன­வர்­களை உடன் வெளி­யே­று­மாறு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. இத­னை­ய­டுத்து மீன­வர்­கள் அங்­கி­ருந்து வெளி­யே­றி­யி­ருந்­த­னர்.

வட­ம­ராட்சி கிழக்­குப் பகு­தி­யின் பருத்­தித்­துறை நீதி­மன்ற எல்­லைப்­ப­ரப்­புக்­குள் தொழி­லில் ஈடு­ப­டும் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் தொடர்ந்­தும் அரச நிலத்­தில் அனு­ம­தி­யின்றி தங்­கி­யி­ருந்து கடல் அட்டை பிடிப்­ப­த­னால் அவர்­க­ளுக்கு எதி­ரா­க­வும் வழக்­குத் தாக்­கல் செய்­யும் வகை­யில் பிர­தேச செய­ல­ ரினால் அறி­வித்­தல் ஒட்­டப்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து வெளி­மா­வட்ட மீன­வர்­கள் வெளி­யேறி வரு­கின்­ற­னர்.

Copyright © 7656 Mukadu · All rights reserved · designed by Speed IT net