ஒட்டுசுட்டான் வைத்தியசாலையை தரமுயர்த்துங்கள்!
ஒட்டுசுட்டான் வைத்தியசாலையைத் தரமுயர்த்துமாறு அந்த பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியகலாநிதி சி சிவமோகன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது
இதன்போதே பிரதேச மக்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதுதொடர்பில்மேலும்அறியவருகையில்.
ஆண்டுக்கு இரண்டு வைத்தியசாலையை தரமுயர்த்தல் செயற்றிட்டத்தின் கீழ் இந்த வருடம் இரண்டு வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முல்லைத்தீவு சுகாதாரப்பணிப்பாளர் தெரிவித்திருந்ததாகவும்.
எனவே தமது பகுதியில் காணப்படும் வைத்தியசாலையையும் தரமுயர்தும்படியும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் குறிப்பிட்ட நாட்களில் வருகைதந்தே நோயாளர்களை பார்வையிடுவதாகவும், போதிய வசதிகள் இல்லாததால் இந்தப்பகுதி மக்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கே நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் தற்போது மகப்பேற்று தாதியர்கள், ஊசிபோடும் தாதியர்கள் இந்த வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதேச மக்களால் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் அங்கு தரித்து நின்று வைத்தியர்கள் தமது சேவைகளை செய்யக்கூடிய வசதிகளையும், வைத்தியசாலைக்கு ஏனைய வசதிகளையும் செய்து தரும்படியும் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் முத்துஜயன்கட்டு இடதுகரை மற்றும் வலதுகரை மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் எனவும் அவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்தனர்.
மேலும் குறித்த வைத்தியசாலை தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.