சர்வதேச ரீதியில் வெங்கலபதக்கம் பெற்ற வவுனியா மாணவனைக் கௌரவிக்கும் நிகழ்வு

சர்வதேச ரீதியில் வெங்கலபதக்கம் பெற்ற வவுனியா மாணவனைக் கௌரவிக்கும் நிகழ்வு

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பாடசாலை சார்பாக சர்வதேச ரீதியில் இடம்பெற்ற விஞ்ஞான, கணிதபாடத்தில் வெண்கலப்பதக்கத்தினை பெற்றுக்கொண்ட மாணவன் ஜெயக்குமார் லெவிந் மற்றும் இப்போட்டியில் பங்குபற்றிய பத்மநாதன் ஆவினன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை பாடசாலை காலைப்பிரார்த்தனையின்போது பாடசாலை அதிபர் த.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சீனா நாட்டில் இடம்பெற்ற கணித விஞ்ஞான ஒலும்பியாட் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்ற மாணவன் மற்றும் பங்குபற்றிய மாணவன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வில் வவுனியா தெற்கு கல்வி வலய உதவிப்பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள் கணிதம், விஞ்ஞானம், மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு மாணவனைக் கௌரவித்துவைத்தனர்.

பாடசாலையின் மலர் மாலை அணிவித்து நுழைவாயிலிருந்து பாண்ட் வாத்தியங்களுடன் காலைப்பிரார்த்தனை மைதானத்திற்கு மாணவர்கள் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Copyright © 4752 Mukadu · All rights reserved · designed by Speed IT net