சற்று முன்னர் விஜயகலா மகேஸ்வரன் கைது!

சற்று முன்னர் விஜயகலா மகேஸ்வரன் கைது!

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் குற்றவிசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து தொடர்பாகவே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

வடக்கில் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகுவதை எதிர்பார்ப்பதாக விஜயகலா தெரிவித்த கருத்து, நாட்டில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக அவரை பதவி விலகுமாறும், கைதுசெய்யப்பட வேண்டுமென்றும் எதிர்த்தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தமிழ் மக்களின் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவுமே விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்த விஜயகலா, கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதி தமது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றிலும் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் இன்று விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Copyright © 6555 Mukadu · All rights reserved · designed by Speed IT net