விஜயகலாவிற்கு பிணை!
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட அவர், புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது 500,000 ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாடாளுமன்ற உறுப்பினரை பிணையில் விடுவிக்க பொலிஸார் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.