இலங்கை இளைஞனின் செயற்பாடு காரணமாக தென்கொரியா அரசாங்கம் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.
சோல் நகரில் அமைந்துள்ள எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிப்பினால் சுமார் 3 மில்லியன் லீற்றர் எரிபொருள் எரிந்து போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கொரிய பாதுகாப்பு பிரிவினர் இலங்கை இளைஞனை கைது செய்துள்ளனர்.
இலங்கை இளைஞனினால் அனுப்பப்பட்ட வானவேடிக்கை வெடித்தமை காரணமாக இந்த பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த வானவெடி எரிபொருள் சேமிப்பு தொட்டியில் விழுந்தமையினால் தீப்பற்றியுள்ளது. இதனால் அங்கிருந்த எண்ணெய் தாங்கிகள் வெடித்து சிதறியுள்ளன.
கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன் 27 வயதான ஒருவர் எனவும் அவர் தென்கொரியாவின் நிர்மாணிப்பு துறையில் பணி செய்வதாகவும் கூறப்படுகின்றது.
சமகாலத்தில் உலகளாவிய ரீதியில் எரிபொருளுக்காக யுத்தம் ஏற்படுமளவுக்கு சூழ்நிலைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் பெருந்தொகையான எண்ணெய் எரிந்து நாசமாகியுள்ளமை தென்கொரிய அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.