மட்டக்களப்பில் போதை கலந்த லேகியப் பக்கட்டுக்கள் பறிமுதல்!

மட்டக்களப்பில் போதை கலந்த லேகியப் பக்கட்டுக்கள் பறிமுதல் ; ஒருவர் கைது!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனையில் சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான போதை கலந்த 82 லேகியப்பக்கட்டுக்களை நேற்று திங்கட்கிழமை மாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஒரு வரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்த்தூரி ஆராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர்.

சம்பவதினமான நேற்று மாலை பூநொச்சிமுனை தாறுஸ்ஸலாம் மைதானத்திற்கருகிலுள்ள வாகன கராஜ் ஒன்றினை சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கையின் போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை கலந்த 82 லேகியப் பக்கட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஒருவரை கைது செய்தனர்.

ஆயுர்வேத மருந்து போன்று லேபலிடப்பட்டு விற்பணைக்காக தயார் நிலையில் இந்த போதை கலந்;த லேகியம் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளதுடன்.

குறித்த லேகிய ஒவ்வொரு பக்கட்டிலும் 25 சிறிய பக்கட்டுக்கள் உள்ளதாகவும் இது சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மறைத்து வைத்திருந்த ,இதற்கு பொறுப்பான நபர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குறித்த நபர் காத்தான்குடி ஆறாம் குறிச்சி பரீனாஸ் லேனைச் சேர்ந்தவர் ஆவார்.

இதில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது டிதாடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற் கொண்டுவருகின்றமை குறிப்படித்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net