யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுரம் நோக்கி நடைபவனி!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மாபெரும் அனுராதபுரம் நோக்கி நடைபவனி!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுரம் நோக்கி மாபெரும் நடைபவனி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இன்று காலை இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபவனி ஏ9 வீதியூடாக அனுராதபுரம் சிறைச்சாலையை சென்றடையவுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கிருஷ்ணமேனன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியில் மாணவர்கள் அரசியல்வாதிகள் பொது மக்கள் எனப் பலரும் இணைந்து கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இப் பேரணியில் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி மற்றும் வவுனியா வளாக மாணவர்களும் இணைந்து கொள்ளவுள்ளனர்.

Copyright © 1599 Mukadu · All rights reserved · designed by Speed IT net