இனம் தெரியாதவர்களால் சிற்றூர்திகள் மீது தாக்குதல்!

இனம் தெரியாதவர்களால் சிற்றூர்திகள் மீது தாக்குதல்!

கிளிநொச்சியில் நேற்றும் நேற்று முன்தினமும்( 09,08) பரந்தன் முறிகண்டி சிற்றூர்திகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்ப்டுள்ளன.

குறித்த தாக்குதல்கள் ஏ9 பிரதான வீதியில் பகல் வேளைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உந்துருகளில் முகத்தை மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்துகொண்டு வரும் தரப்பினர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுவிடுகின்றனர். என சிற்றூர்தி உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான தாக்குதல்களில் சிற்றூர்திகளின் கண்ணாடிகளே உடைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் கூட்டத்தில் பேரூந்து உரிமையாளர்களுக்கும், சிற்றூர்தி உரிமையாளர்களுக்கும் இடையே கருத்து முரன்பாடுகள் ஏற்பட்டது என்றும் அதன் விளைவாகவே இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் சிற்றூர்தி உரிமையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Copyright © 2607 Mukadu · All rights reserved · designed by Speed IT net