உத்தரப்பிரதேசத்தில் விபத்து: 7 பேர் பலி!

உத்தரப்பிரதேசத்தில் விபத்து: 7 பேர் பலி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரோரேலி-கச்சன்பூர் வழியாக சென்ற, பராக்க எக்ஸ்பிரஸ் ரயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

கச்சன்பூர் ரயில் நிலையத்திலிருந்து, 6 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net