சிறுமிக்கு மண்டை ஓட்டினை மாற்றி முதன்முறையாக சாதனை!

சிறுமிக்கு மண்டை ஓட்டினை மாற்றி முதன்முறையாக சாதனை!

இந்தியாவில் முதன்முறையாக மண்டை ஓட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. புனேயில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் 4 வயது சிறுமிக்கு இந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் இடம்பெற்ற விபத்தில் பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சிறுமிக்கு இம்முறை பெரும் சத்திரசிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் உயிர்த்தப்பியிருந்தார்.

அதன்பின்னர் மண்டை ஓட்டில் ஏற்பட்ட சிறிய விரிசல் பெரிதாகியுள்ளதென வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை வழங்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், அச்சிறுமி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இவருக்கு மண்டை ஓட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்படி குறித்த சிறுமியின் மண்டை ஓட்டின் ஐந்தில் மூன்று பங்கை மாற்றி இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட மண்டை ஓட்டை பயன்படுத்தி அந்த சிறுமிக்கு பொருத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது அந்த சிறுமி நலமுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவிலேயே முதன்முறையாக மண்டை ஓட்டு அறுவை சிகிச்சை என்று மருந்துவர்கள் கூறுகின்றார்கள்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net